நடிகர் சூர்யா குடும்பத்தின் அகரம் பவுண்டடேஷன் மலை கிராமத்து பெண்ணின் கனவை நனவாக்கியது நடிகர் சூர்யா குடும்பத்தின் அகரம் பவுண்டடேஷன் மலை கிராமத்து பெண்ணின் கனவை நனவாக்கியது

கொடைக்கானல் மலையில் உள்ள கோம்பை பெருங்காடு கிராமத்து மக்கள் படிக்க வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் மலைவழியாக நடந்து சென்று படிக்க வேண்டும். அதனால் யாரும் தங்கள் பிள்ளையை படிக்க அனுப்புவதில்லை. அதையும் மீறி சின்னவன் என்பவர் மகள் ரேவதி கொடைக்கானல் ஒருங்கிணைந்த ஆதிவாசிகள் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 வரை படித்தார். அந்த ஊரிலேயே பிளஸ்-2 வரை படித்த முதல் மாணவி அவர்தான். ஆனால் தொடர்ந்து படிக்க அவருக்கு வசதியில்லை. இலவசமாக சீட் கொடுக்க கல்வி நிறுவனங்களும் தயாராக இல்லை. இதனால் படிப்பை நிறுத்திய ரேவதி தாய், தந்தையுடன் இணைந்து காட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டடேஷன் நிர்வாகிகள் சூர்யாவுக்கு இந்த தகவலை தெரிவித்தனர். உடனே அவர் ரேவதியை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு கூறினார். அகரம் பவுண்டேசனால் சென்னை அழைத்து வரப்பட்ட ரேவதி இங்குள்ள அப்பலோ கல்லூரியில் அவர் விரும்பிய பி.சி.ஏ படிப்பில் சேர்க்கப்பட்டார். சி.ஏ படிக்க விரும்பும் ரேவதி படித்து முடித்து தன் கிராமத்திற்கு சென்று அங்குள்ள அத்தனை குழந்தைகளையும் படிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான செலவுகள் அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆசிரியர்