September 27, 2023 1:56 pm

இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் மரணம்- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் மரணம்- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரபல இசை கலைஞர் மாண்டலின் சீனிவாசனுக்கு கடந்த 3–ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 45. இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் சீனிவாசன் சென்னை வடபழனி தன லட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மறைவு பற்றி கேள்விப்பட்டதும், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மாண்டலின் சீனிவாசன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறும்போது, ‘‘மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இசைத்துறையில் மாண்டலின் சீனிவாசன் பங்களிப்பு அளப்பரியாதது. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவில் நிற்கும்’’ என்று கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்