March 27, 2023 2:39 am

விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள்விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் பட நிறுவனம், ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து ஹாலிவுட் படம் ஒன்று எடுக்கவுள்ளார்களாம். அதில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி நடிகரான விஜய்யை நடிக்க முயற்சி செய்கிறார்களாம். முதலில் ஆங்கிலத்தில் இப்படத்தை எடுத்து பின்னர் ஜெர்மனில் டப் செய்ய இருக்கிறார்களாம்.

இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்க வில்லையாம். விஜய் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்