திருமண விழாவில் நடிகர் அஜித்!

நடிகர் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைத்துறையில் மிகவும் வித்தியாசமான நபர் என்றால் நடிகர் அஜித் என்றே சொல்லலாம். பொதுவாக கேளிக்கை மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவராகவே காணப்படும் அஜித், துக்க காரியங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் இயல்புடையவர். ஒரு முறை மறைந்த முதல்வர் கருணாநிதி இருக்கும் மேடையிலே சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையானது என்பது குறிப்பிடதக்கது.

Ajith

சில நேரங்களில் பொது மக்களுக்கு போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதாலே அஜித் நிறைய நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவார்.ஆனால் இன்று தனது உதவியாளர் சுரேஷ் சந்திரா தங்கை மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் பங்குபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிரியர்