ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக நடித்து வருபவர் ஐஷ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா தத்தாவா இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.