திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பலியானார்

தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் அதில் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்