பரீட்சை எழுத வந்த சாய் பல்லவியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்

பரீட்சை எழுத வந்த சாய் பல்லவியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் பல்லவியுடன் செல்பி எடுக்க மாணவர்கள், ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டுள்ளனர்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சாய் பல்லவி

இந்நிலையில் கல்லூரி ஒன்றிற்கு தேர்வு எழுத வந்துள்ளார் சாய் பல்லவி. அப்போது அங்கிருந்து சக தேர்வர்கள் அவரை கண்டுகொண்டு, செல்ஃபி எடுத்து கொண்டனர். சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

ஆசிரியர்