Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

எத்தனால் பற்றாக்குறை – மதுபான உற்பத்தி பாதிப்பு

மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக...

ஒரு குடும்பத்தின் மாதச்செலவு 5 ஆயிரம் ரூபாவால் உயர்வு

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளுக்கமைய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த...

தென்னிந்திய சினிமா உலகில் கலக்கும் ஈழத்து இளைஞர் ஜெனோசன்

இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல் “உன் நினைவுகளில்”. காதல் கொண்ட இரு நெஞ்சம் காதலிக்கும் போதும் காதல் பிரிவின் போதும் காணப்படக்கூடிய காதல்வயப்பட்ட முத்தத்தின் காட்சிகளையும்...

புலம்பெயர்ந்தோரின் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்! | ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு பார்வையாளர் விசாவில் செல்பவர்கள் ‘வெளிநாட்டுப் பார்வையாளருக்கான மருத்துவ காப்பீட்டை’( Overseas Visitor Health Cover) கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை.

ஆசிரியர்

ஓடிடியில் வெளியாகியுள்ள சினம்கொள் திரைப்படத்திற்கு பேராதரவு தாருங்கள் | தீபச்செல்வன்

தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில் உள்ள மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று ஈழத்து எழுத்தாளரும் சினம்கொள் படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். 

ஓடிடிதளத்தில் (eelampaly.com) வெளியாகியுள்ள சினம்கொள் படத்திற்கு ஈழ மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் சினம்கொள் திரைப்படக் குழுவினர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சினம்கொள் திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். அவர் பிச்சைக்காரன், செல்லாமலே, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களின் இயக்குனர் சசியிடம் உதவி இயக்குனராக கடமையாற்றியவர். அத்துடன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பழனிகுமார் மாணிக்கமும் இசையமைப்பாளராக என்.ஆர். ரகுநந்தனும் பணியாற்றியுள்ளார். ரகுநந்தன் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்பபறவைகள், சுந்தரபாண்டியன் முதலிய படங்களுக்கு இசையமைத்த முக்கிய ஆளுமையாகும். 

மலையகம், வடக்கு கிழக்கு, சிங்கள கலைஞர்கள், தமிழக கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள், கனேடிய கலைஞர்கள் மற்றும் சர்வதேச கலைஞர்கள் எனப் பரதரப்பட்டவர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டுப்படைப்பான சினம்கொள் உலகத் தரமான படமாக இருப்பதாகவே தமிழக திரைப்பட பிரபலங்கள் வியந்து பாராட்டி இருப்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன். 

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அரவிந்த் சிவஞானமும் கதாநாயகியாக நர்வினி டேவிட்டும் நடித்துள்ளனர். அத்துடன் பெருமளவான கதாபாத்திரங்களில் ஈழத்தை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். 

ஈழ மண்ணிக்காட்சியையும் ஈழ மண்ணின் கதையையும் கலை அழகியல் குன்றாமல் இந்தப் படம் பேசுகின்றது. ஈழத்தில் இருந்து வரும் படங்கள் டாக்குமன்ரி படங்கள் எனக் குறைகூறப்படுகின்ற நிலையில் சிறந்த கெமர்சியல் படமாக, ஜனரஞ்சகப் படமாக சினம்கொள் அமைந்திருப்பதுடன் கலை அழகியல் குன்றாத வகையிலும் இப் படம் அமைந்திருப்பதை இந்திய ஊடகங்களின் விமர்சனங்கள் அண்மையில் பாராட்டி உள்ளன. 

அத்துடன் இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இந்தப் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளது. இந்திய தணிக்கை சபையின் யூ சான்றிதழ் பெற்ற முதல் ஈழத் திரைப்படமும் இதுவே. அத்துடன் இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை சபையும் இந்தப் படத்திற்கு சான்றிதழ்  அளித்துள்ளது. 

இந்தப் படத்தை பார்த்துள்ள தமிழகத் திரைப்பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருவதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். குறிப்பாக நடிகர் நாசர் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதேபோல இயக்குனர் இமையம் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், இயக்குனர் சசி, இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் வைரமுத்து எனப் பலரும் வியக்கும் படைப்பாக சினம்கொள் உருவாகி உள்ளமை ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் கலைப்பணி என்றே கருதுகிறேன். 

அத்துடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவும் சினம்கொள் படம் குறித்து பாராட்டுக்களையும் வியப்பான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றது. ஈழத் தமிழ் மக்கள் இதுபோன்ற சிறந்த சினிமா படைப்புக்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை சினம்கொள் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஈழச் சினிமா வரலாற்றில் சினம்கொள் ஒரு மைல் கல்லாக அமையும் என்றே நம்புகிறேன். 

உலக நாடுகளில் இந்தப் படம் பரீட்சார்த்தமாக திரையிடப்பட்ட போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்தார்கள். படத்தை பார்த்த அத்தனை பேரும் கண்ணீரோடும் நெகிழச்சியோடும் சென்றதைக் கண்டோம். அதுபோல ஈழத்தில் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் இப் படம் வெளியிடப்பட்ட போதும் பெருந்திரளான மக்கள் பெரும் நெகிழ்ச்சியுடன் கண்ணீருடன் இந்தப் படத்தை பார்த்தார்கள். மக்களின் இதயத்தை தொடும் வகையில் தீராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த படைப்பாகவும் இப் படம் உருவாகி இருக்கிறது. 

இப்போது நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கான நோக்கம் யாதெனில், தற்போது சினம்கொள் ஈழம்பிளே (eelampaly.com) என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் எந்த விதமான கட்டணங்களும் இல்லாமல் இப் படத்தை பார்க்கலாம். எந்த மக்கள் பற்றிய திரைப்படமோ அந்த மக்களே இத் திரைப்படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இயக்குனர் ரஞ்சித் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். அதேபோல வெளிநாடுகளில் படத்தை பார்க்கத் தவறிய உலகத் தமிழர்கள் அனைவரும் இப் படத்தை பார்க்க வேண்டும். 

எனவே எமது மக்கள் இந்தத் திரைப்படத்தை பார்வையிட வேண்டும். பேராதரவு வழங்க வேண்டும். நிச்சயமாக உங்கள் அனைவரையும் மிகவும் ஈர்க்கின்ற படமாக மீண்டும் மீண்டும் பார்க்க்கின்ற படமாக சினம்கொள் அமையும் என்று திடமாக நம்புகிறேன். ஊடக நண்பர்களும் எமது தாயக பத்திரிகைகளும் இந்தப் படம் பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

ஏன் படத்தின் வெளியீடு தாமதமானது? என்று இச் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியமைக்குப் பதில் அளித்த தீபச்செல்வன், உலக நாடுகளில் பரீட்சார்த்த முயற்சியாக திரையிடல் நடந்தது. அந்த திரையிடல்கள் நடந்து கொண்டிருந்த போதே கொரோனா தொற்று ஏற்பட்டமையால் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. அத்துடன் யாழ் சர்சதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து இலங்கையில் திரையிடல் முயற்சி நடந்தபோதும் இதனையே எதிர்கொண்டோம். விரைவில் இலங்கையில் திரையரங்குகளில் சினம்கொள் வெளியிடப்படும். இப்போது உங்கள் வீடுகளில் இருந்தே ஈழம்பிளே (eelampaly.com) என்ற ஓடிடி தளம் வாயிலாக இந்தப் படத்தை பார்த்து ஆதரவைத் தாருங்கள்…” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இதையும் படிங்க

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இரு...

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

புலம்பெயர் சமூகம் இலங்கையில் இதனைச் செய்ய வேண்டாம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...

தொடர்புச் செய்திகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க...

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்

முள்ளிவாய்க்கால் பரணி! | தீபச்செல்வன்

01கால்கள் எதுவுமற்ற என் மகள்தன் கால்களைக் குறித்துஒருநாள் கேட்கையில்நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர்யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

புலம்பெயர் சமூகம் இலங்கையில் இதனைச் செய்ய வேண்டாம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...

எத்தனால் பற்றாக்குறை – மதுபான உற்பத்தி பாதிப்பு

மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக...

மேலும் பதிவுகள்

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை.

பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும். எனினும் இம்முறை...

கொழும்பின் பல பகுதிகளுக்கு வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை...

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

பிந்திய செய்திகள்

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை மகளிர் அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டது பாகிஸ்தான் மகளிர் அணி

இலங்கை - பாகிஸ்தன் மகளிர் அணிகளுக்கு இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச...

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இரு...

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

துயர் பகிர்வு