March 24, 2023 4:51 pm

கமல்ஹாசனின் ‘பத்தல பத்தல’ பாடலுக்கு எதிர்ப்பு| சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மே 15-ந்தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது. ‘பத்தல பத்தல’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், பத்தலே பத்தலே பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்