புஷ்பா 2 ஐட்டம் பாடலுக்கு நடனமாட மறுத்துவிட்ட சமந்தா

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திலும் போல் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் போலவே ஒரு ஐட்டம் பாடல் இடம் பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பாடலுக்கு நடனமாட படக்குழுவினர் சமந்தாவிடம் அணுகிய நிலையில் அவர் ஆட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சில நடிகைகளிடம் இந்த பாடலுக்கு நடனமாட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா இந்த பாடலுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் மணிரத்னம் இயக்கிய ’உயிரே’ என்ற திரைப்படத்தில் ’தக்க தையா’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் என்பதும் அதே போல் பல பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் போல் இந்த பாடல் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிரியர்