May 31, 2023 6:08 pm

உற்சாகத்தில் ஐஸ்வர்யா மேனன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ எனும் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இப்படத்தைத் தொடர்ந்து ‘வீரா’, ‘தமிழ் படம் 2’, ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’ , ஹ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘கார்த்திகேயா 2’ . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் ‘ஸ்பை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்த இரண்டு திரைப்படங்களைத் தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவேற்றி, ரசிகர்களை எப்போதும் ஆவலுடன் காத்திருக்க வைத்து, சமூக வலைதள பக்கத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர், தற்போது முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பட்ஜட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால், ஓய்வின்றி ஹைதராபாத் – சென்னை என  பரபரப்பாக இயங்கினாலும் உற்சாகத்துடன் வளைய வருகிறார். தமிழ் திரையுலகிலிருந்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்து, புதிய உச்சத்தை தொடுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்