June 7, 2023 6:15 am

யோகி பாபு நடிக்கும் ‘யானை முகத்தான்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘யானை முகத்தான்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆளா ஏ ஆளா..’ எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான காணொளியும் வெளியாகி இருக்கிறது.

மலையாள இயக்குநர் ரஜீஷ் மிதிலா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘யானை முகத்தான்’. யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், உதய் சந்திரா, நாக விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆளா ஏ ஆளா..’ எனத் தொடங்கும் பாடலுக்கான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியர் சி. எம். லோகேஷ் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். கேலண்டரில் இருக்கும் விநாயகரின் புகைப்படம்… படத்தில் மூவுருளி சாரதியாக நடித்திருக்கும் நடிகர் ரமேஷ் திலக்கின் கண்களுக்கு புலப்படவில்லை.

ஏனையவருக்கு விநாயக பகவானின் தோற்றம் தெரிகிறது. கதையம்சத்துடன் உருவாகி இருக்கும் இந்த பாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்