December 7, 2023 10:23 am

‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ரனாவத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘சந்திரமுகி 2’ எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கேரக்டர் லுக் பிரத்யேக போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, யோகி பாபு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் கொமடி  ஜேனரில் தயாராகி இருக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வேட்டையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகவா லோரன்ஸின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கங்கனா ரனாவத் பிரத்யேக சிகை அலங்காரம் மற்றும் ஆடை அணிகலனுடன் கவர்ச்சியாகவும் காதலுடனும் தோன்றுவதால் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.  இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்