September 25, 2023 7:48 am

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பட அப்டேட்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன், தன் பங்களிப்பை நிறைவு செய்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன், சிவராஜ்குமார், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், நாசர், இளங்கோ குமரவேல், விஜி சந்திரசேகர், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன், ஸ்வயம் சித்தா ஆகியோருடன் ஹொலிவுட் நடிகர் எட்வர்டு சொனன்பிளாக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பீரியாடிக் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகனின் பங்களிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள் .

இந்தத் திரைப்படம் எதிர் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்