December 6, 2023 4:09 pm

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டீசர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘அயலான்’ எனும் திரைப்படத்தின் டீசர் ஒக்டோபரில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘அயலான்’. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைப் புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். சயின்ஸ் ஃபிக்சனுடன் கூடிய எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் வெளியீடு குறித்து பலமுறை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, பிறகு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நிறைவடையாததால் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் படக்குழுவினர், ‘அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தின் பணிகள் நிறைவடைவதற்காக எங்களுக்கு கூடுதல் நேரம் அவசியப்பட்டது’ இன்று தெரிவித்துவிட்டு, தற்போது இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தின் டீசர் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தாலும் தமிழ் திரையுலகில் புதிய முயற்சி என்பதால், இயக்குநர் ஆர். ரவிக்குமார்- ‘இசைப் புயல்’ ஏ. ஆர். ரகுமான்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ‘ அயலான் ‘ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்