December 11, 2023 3:07 am

நடிகராக அறிமுகமாகும் இயக்குநரின் பட்டியலில் இடம் பிடித்த சீனு ராமசாமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராகவும் உயர்ந்து வலம் வருபவர்களின் பட்டியல் நீளம். அந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சீனு ராமசாமி. இவர் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.‌

அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகிறார். இவருடன் கதையின் நாயகனாக அருண் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டியூக், ஷிமோர் ருஸ்வெல்ட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. எஸ். சூர்யா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைக்கிறார். புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக அமையவிருக்கும் இந்த திரைப்படத்தை தங்கம் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. முதல் காட்சியை தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார் இயக்கி தொடங்கி வைத்தார். சீனு ராமசாமி இப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாவதால் பெயரிடப்படாத இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்