December 8, 2023 9:33 pm

தளபதி விஜயின் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மிழ் திரையுலகில் தற்போது பேசு பொருளாக… தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ‘லியோ’ திரைப்படம், முதல் நாளன்று இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை வசூலிக்குமா? வசூலிக்காதா.? என்பதாகத்தான் இருக்கிறது.

இது தொடர்பாக திரையுலக வணிகர்கள் பேசுகையில், ”தமிழகத்தில் முதல் காட்சி காலை ஒன்பது மணியளவில் தான் தொடங்குகிறது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும்.. ஒன்பது மணிக்கு முன்னதாகவே முதல் காட்சி தொடங்கி விடுகிறது. இதனால் விஜயின் அதிதீவிர ரசிகர்களும்.. மாநில எல்லையோரத்தில் உள்ள ரசிகர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று படத்தை முதல் காட்சி பார்த்து விடுவார்கள். இதனால் தமிழகத்தில் வசூல் பாதிக்கப்படும்.‌ அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருப்பதால் அங்கும் வசூல் பாதிக்கப்படும். தமிழகத்தில் 19 ஆம் திகதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நாளொன்று ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதித்திருப்பதால்… படம் நன்றாக இருக்கும் பட்சத்தில்… முதல் நாள் வசூல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் முதல் நாள் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என உறுதியாக கூற இயலாது” என்றனர்.

மேலும் வேறு சிலர் பேசுகையில், ” விஜயின் லியோ திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் கால அவகாசம் கொண்டிருந்தாலும், ரசிகர்களுக்கு லியோ படம் பிடித்து விட்டால் வசூல் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும் என்பதும் உண்மை” என்றனர்.‌

தளபதி விஜய் படம் வெற்றி பெறுவதும்.. வசூல் சாதனை புரிவதும்.. அதன் படைப்பாளியான லோகேஷ் கனகராஜின் திறமையான இயக்கத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர். இதனை உண்மையாக்கும் வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்திருக்கிறார். அதாவது ‘:இப்படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும். இதனைக் காண தவறாதீர்கள்” என தெரிவித்திருக்கிறார்.‌

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்