December 10, 2023 8:17 am

‘அப்படிப் போடு’ | துள்ளிக் குதிக்கும் த்ரிஷா !

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

டந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகும் அறிவும் சேர்ந்த பெண்மணியாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார்.

அண்மையில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இன்னமும் த்ரிஷாவின் கதாநாயகி தோரணை மெருகேறிக்கொண்டே போகிறது.

‘லியோ’ படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (26) ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘லியோ’வின் ஒரு வார வசூல் கணக்கு 461 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) என அறிவித்திருந்தது.

அதையறிந்த த்ரிஷா ‘அப்படிப் போடு’ என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ‘லியோ’ படப்பிடிப்பின்போது தான் எடுத்துக்கொண்ட படங்களையும், சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்