December 7, 2023 7:29 am

தோனி ரசிகையான சமந்தா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சமந்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் சென்னை சூப்பர் கிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க.. நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்று பாட்டு பாடினார் அதுமட்டுமின்றி அவர் தோனிக்காக ஒரு விசில் அடித்தார்.

மேலும் தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் ராஞ்சியா? சென்னையா? என்று எனக்கு பல சமயம் சந்தேகமாக இருக்கும் என்றும் அந்த அளவுக்கு அவர் சென்னை மக்களோடு ஒன்றிப்போய்விட்டார் என்றும் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்