June 7, 2023 7:34 am

சமையல் குறிப்புக்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குலோப்ஜாமுன் பாகில், ஒரு டிஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் உறையாமலும், சுவையாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும் போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்

தோசை மாவு புளித்து விட்டால் அரை கப் பாலில் ஒரு டிஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கி, மாவில் சேர்த்து தோசை சுட்டால் முறுகலாகவும், ருசியாகவும் இருக்கும்.

முதல் நாள் மீந்த சப்பாத்திகளை, டப்பாவில் போட்டு மூடி விசில் போடாமல் இரண்டு நிமிடம் குக்கரில் வேக வைத்தால் புதிதாக செய்தது போல் இருக்கும்.

சேனை கிழங்கு வேக வைக்கும் முன் வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும், பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கைப் போடவும், விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்