October 2, 2023 8:55 am

சமையல் குறிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சமையல் குறிப்பு

பயனுள்ள சமையல் குறிப்பு

ஊறுகாய் பூஞ்சணம் பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

ஜாடியில் ஊறுயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணையில் நனைக்கப்பட்ட துணியால்  ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் . ஊறுகாய்ப் போட்டு மூடி வைத்தால்  பூஞ்சணம் பிடிக்காமல் இருக்கும்.

இட்லி செய்யும் போது பின்பற்ற வேண்டியவை 

இட்லி செய்யும் போது கரண்டியை மாவில் விட்டு அடி வரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும்

மேலும் இட்லிக்கு அரிசி 5 பங்குக்கு  உளுந்து ஒருபங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு  போல வரும்.

கொழுக்கட்டை செய்யும் போது ,

ஒரு  கிண்ணத்தில் தண்ணீரில் விரல்களை  நனைக்கவும். பந்து  வடிவில் மாவை உருட்டி மையத்தை குவித்து , உள்ளே பூரணத்தை வைக்கவும்.

பலகாரங்களை பேண வேண்டுமா 

எண்ணை பலகாரங்களை   டப்பாவில் போட்டு வைக்கும் போது கொஞ்சம் உப்பை துணியில் முடிந்து அதனுள் ஒரு ஓரமாக வைத்தால் காரல் நாற்றம் வாராது.

மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்கினால் அவை இயற்கையாக பழுத்த பழம் தண்ணீரில் மிதந்தால் அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டவை .

வெங்காய சட்னி செய்யும் போது  அது சட்னி கசக்காமல் இருக்க வெங்காயத்தை வதக்கி அரைப்பது நல்லது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்