September 22, 2023 6:36 am

விசேட சமையல் குறிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சமையல் குறிப்பு

விசேட சமையல் குறிப்பு  .மிக்சி பிளேட்  கூர்மை போய் விட்டால் அதில் சிறிதளவு கல் உப்பை போட்டு சுற்ற விட்டால் கூர்மையாக்கி வரும்.

காய் கறிகளை வேகவைத்த பின் உப்பு போட்டால் காய் கறிகளில் உள்ள இரும்பு சத்து வீணாகாது.

 

இடியப்ப மா பிசையும் போது கொதிக்கும் பாலை  உற்றி கிளறினால் இடியப்பம் வெண்மையாகபவும் ,மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

மிளகு , காய்ந்த மிளகாய் ,துவரம் பருப்பு,  சீரகம் ஆகியவற்றை வறுத்து சலித்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான மோர் குழம்பு தயார் . குழந்தைகளும் விரும்பி உண்ணும்.

உளுத்தம் பருப்பை ஊற போட்டு அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறு  நாள் காலை தோசையை உத்தியினால் சூப்பராக இருக்கும்.

பால் தயிர் ஆடையை தனியே எடுத்து பிரிட்சில் வைத்து சிறிது நேரம் வைத்து வெண்ணை செய்தால   உருண்டு நன்றாக வரும்.

இட்லிக்கு மாவு ஆட்டும் போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால்  இட்லி பூப்போல் இருக்கும்.

பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள்ளு ,கடுகு  தேங்காய்த்துருவல்  மூன்றையும் சேர்த்தால்  பஜ்ஜி சுவையாக இருக்கும்.

வெந்தய சாம்பார் செய்யும் போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அறையொத்து குழம்பில் சேர்த்தாள் ருசியும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்