செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கருவளையத்தை போக்க சிம்பிளான இந்த 5 விஷயம் செய்யுங்க..

கருவளையத்தை போக்க சிம்பிளான இந்த 5 விஷயம் செய்யுங்க..

2 minutes read
கருவளையம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரை தாண்டி பராமரிப்பின்மையா லும் இவை அதிகரிக்கும்? இதை எப்படி போக்குவது பார்க்கலாமா?

​ரோஸ் வாட்டர்

முகத்தை சுற்றி கருவளையம் வருவது இயல்பானது. சிலருக்கு தூக்கம் பற்றாக்குறை யாக இருந்தால் வரும். இன்னும் சிலருக்கு அதிக மன உளைச்சல் காரணமாகவும் வரும். ஆனால் இவையெல்லாமே தற்காலிகமானது என்றாலும் உரிய பராமரிப்பு இல்லை யென்றால் இவை அதிகரித்து அதிகப்படியான கறுப்பையும், கண்களுக்கு கீழ் வீக்கத் தையும் உண்டு செய்யும். ஆரம்ப கட்டத்தில் எளிமையான பராமரிப்பை மேற்கொள் வதன் மூலம் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். என்னவெல்லாம் செய்ய வேண்டும் பார்க்கலாமா?

முதலில் கண்களை சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வையுங்கள். கண்களுக்கு குளிர்ச்சியையும், கண்ணுக்கு கீழ் இமைகளில் உண்டாகும் வீக்கத்தையும் வரவிடாமல் செய்யும். 5 நிமிடங்கள் வரை வைத்து இந்த காட்டனை அகற்றிவிடுங்கள்.

​வெள்ளரியும் தக்காளியும்

பொதுவாக கருவளையம் என்றாலே வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி கண்களின் மீது வையுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் பலன் விரைவாக கிடைக்க வேண்டுமென் றால் வெள்ளரிக்காயுடன் சம அளவு தக்காளி சேர்த்து நீர்விடாமல் அரைத்து கண்களின் மீது பற்று போடலாம். நேரடியாக கண்களின் மீது இந்த கலவையை தடவும் போது அவை கண்களுக்கு ஊடுருவும் வாய்ப்பு உண்டு. அதனால் கண்களின் மேல் ஒரு மெல்லிய துணியை வைத்து அதன் மீது அந்த கலவையை தடவ வேண்டும். இந்த கலவையில் காட்டனை ஊறவைத்தும் கண்களில் தடவி எடுக்கலாம்.

குளிர்ந்த கலவையான வெள்ளரி தக்காளியின் சாறை எடுத்து கண்களின் மீது சற்று கனமாக போடவேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மெதுவாக அந்த கலவையை எடுத்து பிறகு கண்களில் மாற்றத்தை காணலாம்.

​பழத்தோல்

ஆரஞ்சு, வாழைப்பழத்தோல் இருந்தால் அதில் இருக்கும் நாரை நீக்கி கொள்ள வேண்டும். பிறகு அதை வெள்ளரி சாறோடு நனைத்து கண்கள் மீது வைத்து கண்களை மூடி கொள்ள வும். 10 நிமிடங்கள் வரை கண்களை அசைக்காமல் வைத்திருந்து எடுத்தால் கண்களில் இருக்கும் உஷ்ணத்தை பழத்தோலில் உணரலாம்.

கண்களில் கருவளையம் இருப்பவர்கள் மட்டுமல்ல கண்களில் புத்துணர்ச்சி தருவதற் கும் கூட இவை பெரிதும் உதவும். குறிப்பாக கம்ப்யூட்டர் பணியில் கண்களுக்கு அதிக வேலை தரும் பணியில் இருப்பவர்கள் வாரம் மூன்று நாள் இப்படி செய்வது கண்களில் இருக்கும் சோர்வை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும்.

​உருளைக்கிழங்கு சீவல்

உருளைக்கிழங்கை தோல்சீவி தேங்காய் போன்று துருவி கொள்ள வேண்டும். கண்களை மூடி அதன் மேல் மெல்லிய காஸ் துணியை வைத்து கண்களின் மீது அழுத்தமாக பேஸ்ட் போல் உருளைக்கிழங்கு துருவலை வைக்க வேண்டும்.

உருளைகிழங்கை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டனை அதில் நனைத்து சாறு இழுக்கும் வரை ஊறவிடவும். பிறகு அந்த காட்டனை எடுத்து ( நீர் வடியா மல் இருக்க வேண்டும்) கண்களின் மீது வைத்து 10 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். இப்படி எதுவுமே செய்ய நேரமில்லை என்பவர்கள் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். தொடர்ந்து 3 நாள் உருளைக்கிழங்கை பயன்படுத்தினாலே கருவளையத்தின் நிறம் மங்க தொடங்கும்.

​புதினா பேஸ்ட்

வாய்க்கு புத்துணர்ச்சி தருவதை போலவே கண்களுக்கும் புத்துணர்ச்சி தருகிறது புதினா. புதினாவை மண் போக சுத்தம் செய்து இலேசாக நீர் தெளித்து மைய அரைக்க வும். இதில் காட்டனை கண்களில் வைப்பதற்கு ஏதுவாக உருட்டி புதினா நீரில் ஊறவிட்டு ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். பிறகு அதை எடுத்து கண்களில் மீது கண்களை சுற்றி ஒற்றி ஒற்றி எடுத்தபடி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து மசாஜ் செய்யும் போது கருவளைய கருப்பு மங்க தொடங்குகிறது.

இதே போன்று பழங்கள், பழங்களின் தோல்களை அரைத்து காட்டனில் ஊறவைத்தும் வைக்கலாம். அப்படியே காஸ் பேப்பரை கண்களின் மீது வைத்தும் தடவலாம். இதனால் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் அழகாக தெரியும்.

குறிப்பு

கருவளையத்துக்கு காரணம் மரபாகவும் , உடலில் வைட்டமின் சத்து குறைவாகவும் இருக்கலாம். இவை தவிர அன்றாடம் பழக்க வழக்கங்களில் உண்டான மாற்றங்களா கவும் இருக்கலாம். குறிப்பாக கண்களுக்கு அதிக பணி, உரிய தூக்கமின்மை, நீண்ட நேரம் விழித்திருப்பது, செல்ஃபோன் பயன்படுத்துவது போன்றவையும் கூட காரணமாக இருக்கலாம் என்பதால் கருவளைய பராமரிப்பின் போது இதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

கருவளையத்துக்கு பேக் மட்டுமல்லாமல் இலேசாக மசாஜ் செய்வதும் நல்லது. டீஸ்பூனை ஃப்ரிட்ஜ்ஜில் குளிர வைத்து அழுத்தி மசாஜ் செய்யலாம். அல்லது கடைகளில் தற்போது கூல் கம்ப்ரஸர் என்று சொல்லக்கூடிய கண்களுக்கு அழுத்தம் தரக்கூடிய மிருதுவான மசாஜ் பால் கிடைக்கிறது. இதையும் பயன்படுத்தலாம்.

 

நன்றி : சமயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.