Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் நீங்க ஒல்லியோ குண்டோ… கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா?

நீங்க ஒல்லியோ குண்டோ… கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா?

5 minutes read

பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதிரியான அழகு. கருப்பான பெண்களுக்கென்று சில ஃபீச்சர்ஸ்கள் மிக வும் கவர்ச்சியாக நம்மை ரசிக்க வைக்கும். அதேபோல் சிகப்பாக இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள், ஒல்லியானவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி.

ஆனால் கறுப்போ சிவப்போ, ஒல்லியோ குண்டோ முக வடிவம் என்பதும் அதை பராமரிப்பதும் மிக முக்கியம். அதிலும் கன்னங்கள் கொஞ்சம் லேசாக உப்பி கொழுகொழுவென்று இருந்தால், பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.

அகமும் முகமும்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் உடலில் நம்முடைய முகம் எவ்வளவு முக்கியமான அங்கம் என்று. இதற்கு மேக்கப் போடுவது, மனதுக்குள் சந்தோஷமாக இருப்பது என்று மட்டும் அர்த்தம் கிடையாது. நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற உள்ளுறுப்புகள் யாவும் ஆரோக்கியமாக இருந்தால் நம்முடைய முகமும் பிரகாசமாகவே இருக்கும். அதனுடைய பொருள் தான் அந்த பழமொழி. அதனால் முகப் பராமரிப்பு முக்கியம்.

ஒட்டிய கன்னங்கள்

ஒட்டிய கன்னங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பார்ப்பதற்கு ன்றாக இருக்காது. அதிலும் சில பெண்கள், கச்சிதமான உடலமைப்புடனும் பளபளப்பாக சருமத்துடன் இருந்தாலும் கூட, பார்ப்பதற்கு ஏதோ இழந்ததைப் போ்ல இருக்கும். அது வேறு எதுவும்இல்லை. என்ன தான் பளபளப்பான சருமமாக இருந்தாலும் கன்னங்கள் ஒட்டிப் போய் இருந்தால், அழகில் பாதி குறைந்து தான் தெரியும். இதுவே கொழுகொழு கன்னங்களாக இருந்தால் உங்களுடைய அழகு இரண்டு மடங்கு அதிகமாகித் தெரியும். சரி கன்னங்கள் ரொம்ப ஒட்டிப் போவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி பார்க்கலாம்.

தைராய்டு பிரச்சனை

நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம் மற்றும் தாதுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது, சருமத் தோல்கள் சுருங்கி, முகம் ஒடுங்கிவிடுகிறது. தைராய்டு, ரத்த சிகப்பணுக்கள் குறைபாடு போன்ற காரணங்களினாலும், பெண்களின் முகம் ஒட்டிப் போகலாம். உடலில் பிராண வாயு சீராகப் பரவ வாய்ப்பில்லாமல், இரத்த ஓட்டம் தடைப்படும்போது இரத்தத்தில் நச்சுக்கள் கலக்கும்போது, உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவது ஆகியவற்றாலும் கூட சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வுகள் உணவு தான். நம்முடைய உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

சிறு தானியங்கள்

உடலுக்கு நன்மைகள் தரும், வைட்டமின் சத்துக்களையும், ஆற்றல் தரும் புரதம் மற்றும் தாதுக்களையும் அதிகரிக்க, கீரைகள், நார்ச்சத்து அதிகமாக உள்ள கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, தினை, கம்பு, சோளம் போன்ற தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால்க, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உள்ளுறுப்புகள் செயல்பாடுகள் சீரடைகிறது,

பாதாம் பருப்பு

பொதுவாக நாம் வீட்டில் ஆப்பிள், ஆரஞ்சு, கேரட் இவற்றை ஜூஸாக்கி சாப்பிடுவோம். அதிலும் இந்த தினமும் மதிய உணவுக்குப் பின் சாலட் அல்லது பழச்சாறு குடிக்கின்ற பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, வெறும் பழச்சாறு மட்டும் குடிக்காமல், அத்துடன் பாதாம் பருப்பை சேர்த்து அரைத்துப் பருகி வரலாம். அப்படியே உங்களுடைய கன்னங்கள் நாளுக்கு நாள் லேசாக உப்பிக் கொண்டு இருப்பதை உங்களால் உணர முடியும்.

லெமன்

தினமும் காலையில் எழுந்ததும் மிதமான சூடு உள்ள நீரில், எலுமிச்சை சாறைப் பிழிந்து, அதில் சிறிது தேனைக் கலந்து, பருகி வரலாம். இவை, ரத்த ஓட்டத்தை சீராக்கும். சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை செய்யும் போது ரத்த ஓட்டம் சீராவதோடு உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கவும். இதை குடிக்கும்போது டீ, காபியைத் தவிர்க்க வேண்டும்.

நல்ல தூக்கம்

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்கு குறையாத தூக்கமும், மனக் கவலையற்ற வாழ்க்கை முறையும், நேர்மறை மன நிலையும், உடல் நலனை காக்கும். பொலிவான முகத்தையும், சதைப்பற்றுமிக்க கன்னங்களையும் அடைய அதிக விலையுள்ள கிரீம்கள் போன்ற செயற்கை வழிகளில் தங்களுடைய பொலிவை இழந்து விடாமல் இயற்கை வழியில் அவற்றை நம்மால் மீட்டெடுக்க முடியும்.

சப்போட்டா பழம்

சப்போட்டா பழங்களை, சத்துக்கள் நிறைந்த சுவையான பழம் என்று நாம் நினைத்திருப்போம், ஆயினும், சருமத்தை பொலிவாக்கி, இரத்த ஓட்டத்தை தூண்டி, சதைப்பற்றை அதிகரிக்கும். குறிப்பாக, கொழுகொழு கன்னங்கள் வேண்டும் என்று நினைத்தால் தினமும் இரண்டு சப்போட்டா பழங்களைச் சாப்பிடுங்கள்.

சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, எலும்புகளை உறுதியாக்கி, உடல் தசைகளை வலுவாக்கி, சருமத்தைப் பொலிவாக்கும்.

சப்போட்டா பேஸ் பேக்

தோல் நீக்கிய சப்போட்டா பழத்தை நன்கு குழைத்து, அதில், இழைத்த சந்தனம் அல்லது தூய சந்தனத் தூளை சேர்த்து, அத்துடன் ரோஸ் வாட்டர் எனும் சுத்தமான பன்னீரைக் கலந்து, முகத்தில் மென்மையாக பூசவும். ஒட்டிய கன்னங்களில், பேஸ்ட் போல, இந்தக் கலவையை தடவ வேண்டும். கால் மணி நேரம் ஊறியபின், இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவலாம். இது போல, ஓரிரு முறை ஒரு வாரத்தில் செய்து வர, முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கொலாஜன் எனும் புரதச்செல்கள் உற்பத்தி சீராகி, ஒட்டிய கன்னங்களில் சதைகள், வனப்பாக வெளிப்பட ஆரம்பிக்கும்.

சப்போட்டா மற்றும் பாசிப்பயறு

சப்போட்டாவை, பச்சைப் பயிற்று மாவுடன், சிறிது விளக்கெண்ணை விட்டு, விழுதாக்கி, கைவிரல்கள், நகங்கள், கால்களில் இதமாக தடவி, ஊறிய பின், குளித்துவர, வறண்ட தோல் மென்மையாகி, விரல் நகங்கள் பொலிவாகும்.

சப்போட்டாவை தினமும், சாப்பிட்டுவர, உடலாற்றல் மேம்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதால், உடலிலுள்ள பல பாதிப்புகளில் இருந்து, நிவாரணம் கிடைக்கும்.

இந்துப்பு

சப்போட்டா மட்டுமல்ல. இளம் சூடான நீரில், சிறிது தேன் மற்றும் இந்துப்பு போட்டு நன்கு கலக்கி, அந்த நீரை வாயில் சற்றுநேரம் வைத்திருந்து, நன்கு வாய் கொப்பளித்துவர, கன்னங்கள் பூரித்து புஷ்ஷென்று ஆகும்.

பட்டர்

நன்கு திரண்ட வெண்ணையுடன் சிறிது, நாட்டு சர்க்கரை சேர்த்து, மிக்சியில் மையாக அரைத்து, முகத்தில் தடவி, சற்று நேரம் கழிந்தபின், முகத்தை இளஞ்சூடான நீரில் அலச, கன்னங்கள் எதிர்பார்த்தது போல, ஷைனிங் ஆகும்.

கேரட் ஜூஸ்

ஆப்பிள் அல்லது கேரட்டை சாறெடுத்து, அந்தச் சாற்றில், சிறிது தேனைக் கலந்து, கன்னங்களில் மென்மையாகத் தடவி, சற்று நேரம் ஊறிய பின், முகத்தை இதமான சுடுநீரில் அலசிவர, முகச்சுருக்கங்கள் மறைந்து, முக சதைகள், பொலிவாகும்.

பாதாம் பேஸ்ட்

பன்னீரில், நன்கு மையாக அரைத்த பாதாம் பருப்பு கலவையை சேர்த்து, பேஸ்ட் போல, முகத்தில் தடவி வரலாம். சற்று நேரம் ஊறியபின், முகத்தை அலச, முகம் பொலிவாக மாறும். அப்புறம் பாருங்க! இந்த மல்கோவா கன்னத்துக்கு என்ன செய்யறீங்கன்னு ஊரே உங்களப் பார்த்துதான் கேட்கும்.

நன்றி | boldsky

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More