Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | கடத்தப்பட்டவர்களின் கண்கள் | தீபச்செல்வன்

கவிதை | கடத்தப்பட்டவர்களின் கண்கள் | தீபச்செல்வன்

1 minutes read
போர்க்காலத்தின் போது காணாமல் போனவர்கள் விவரங்களை சமர்பிக்குமாறு இலங்கை அரசு  அறிவுறுத்தல் || Sri Lanka calls for details of conflict missing issued by  rights group

தவிட்டுக் கலர் துணிகளால்
கண்கள் இறுகக் கட்டப்பட்டவர்கள்
இரத்தப் பொருக்குப் படிந்து
வெடில் மாறாத வழிகளில்
பறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர்

பூக்களைப் போன்ற கண்கள்
நசுங்கி இறந்து போயின

என்னுடைய குழந்தைகளின் கண்களை
மூடிக் கட்டியவர்கள்
இறுதியில் கண்களை பிடுங்கியெடுத்ததை
நான் காணமுடியாதிருந்தேன்

எனது கண்கள் ஒளிபொருந்தியவை
காதல் ஊற்றெடுப்பவை என்று சொல்லிக் கொண்டே
காதலி முத்தமிடுவாள்
அவளது விரல்களால் இமைகளை கோதி முத்திமிட்டபோது
கண்பூக்கள் செழித்துச் சடைத்தன

வெள்ளை நிற வண்டிகள்
மிருகங்களை போல கவ்விச் சென்று
கண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைந்தது

என்னுடைய கண்கள் உதிர்ந்துபோயின

வியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்
எல்லா சித்திரவதைகளின் பின்பாயும்
அவிழ்த்து விடப்படுகையில்
தேசம் இருண்டிருந்தது

நடுத்தெருக்களில் கண்களற்றுத் திரியும்
மனிதர்களின் கண்கள் தனித்தலைந்தன
0

தீபச்செல்வன்

‘எனது குழந்தை பயங்கரவாதி’ தொகுப்பிலிருந்து
2013, விடியல் பதிப்பகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More