சிறிது சிரிப்புகள்
சிறிது கோபங்கள்
சிறிது விளையாட்டுகள்
சிறிது பரிகாசங்கள்
உள்ளே சிறுபிள்ளைத்தனம்
அனால், வெளியே தந்தை முகம்
சிலநேரம்
பிரளயத்திற்கு முன் தோன்றும் அமைதி
சிலநேரம்
ஆனந்தத்தில் திழைக்கும் அழகிய கொண்டாட்டம்
மாடாய் உழைப்பவரோ அவர்
அதனால் ‘மாடு’ என்று என்னை திட்டுவார் அவர்
கதைகள் கூறினாய்
தத்துவங்கள் கூறினாய்
ஆலோசனைகள் பல கூறினாய்
அறிவுரைகளும் பல கூறினாய்
உலகத்திற்கு என் விழிகளை ஊட்டினாய்
விழி நீர் வழிந்தால் விரல்களில் ஏந்தினாய்
உன்னோடு கசப்புகள் இருந்தாலும்
பாகற்காயே உடல் கொழுப்பை போக்கும் என்று உணர்த்தினாய்
இதற்க்கு மேல் என்சொல்வேன் என்றறியேன்
ஒற்றை வரியை தவிர
‘தந்தை எனும் சொல்லிற்கு ஈடு இணை இல்லை இப்புவியில்’
– யாழினி
நன்றி : எழுத்து.காம்