தமிழ்த்தாயின் நீடித்த நிலைத்த வாழ்வுக்காய் தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகளை அர்ப்பணித்த தாமரைச்செல்வியின் எழுத்துலக வாழ்வின் 50 ஆண்டுகளின் நிறைவையொட்டி அவரின் இலக்கிய வாழ்வை நினைவுகூரும் நிகழ்வு இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அரும் பெரும் பணி
கிளிநொச்சி இளைஞர் வட்டாரத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் 50 ஆண்டுகளை எழுத்துலகுக்கு அர்ப்பணித்த தாமரைச்செல்வியின் எழுத்துலக வாழ்வு தொடர்பான விடயங்களும்,
அவர் தமிழ் சமூகத்திற்கு எழுத்துக்களால் ஆற்றிய அரும் பெரும் பணியும் அழகாக நினைவுகூரப்படவுள்ளது.
நன்றி -ஐபிசி தமிழ்