Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழாக ஜீவநதி

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழாக ஜீவநதி

1 minutes read

ஜீவநதி – சஞ்சிகை தனது 175 ம் இதழை ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழாக வெளிக்கொணர்ந்துள்ளது.ஏற்கனவே கவிதைச் சிறப்பிதழ் , பெண் படைப்பாளிகள் சிறப்பிதழ் , நாவல் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளமை அறிந்ததே.

இத்தொகுப்பில் 130 சிற்றிதழ்கள் பற்றி தகவல் , அறிமுகம் , மதிப்பீடுகளாக பலரும் எழுதியுள்ளனர்.சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.ஏதோ கிடைப்பதைக் கொண்டு காரியமாற்றி பெயர் வாங்கிக்கொள்ளும் நிலைக்கு அப்பால் , எவ்வளவு திரட்ட முடியுமோ அந்தளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளதை 436 பக்கங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதழாசிரியர் க.பரணீதரனின் கடும் உழைப்பைக் காண்கிறோம்.பாராட்டி மகிழ்கிறோம்.

இலங்கையின் முதலாவது சஞ்சிகை யாழ்ப்பாணத்தில் இருந்து ‘ தமிழ் மகள்’ வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது.அந்த வகையில் 1915  முதல் 2022 வரையிலான ஈழத்து சிறுசஞ்சிகைகளின் ஆவணமாக இத்தொகுப்பு அமைகிறது.எனவே தகவல் மற்றும் ஆய்வுத் தேவைகளுக்காக உயர்கல்வி நிலையங்கள் , நூலகங்கள் , பாடசாலைகளில் பாதுகாக்கப்பட வேண்டிய தொன்றாகும்.

சலுகை விலையாக 1500/- குறிக்கப்பட்டுள்ளது.எவ்வளவுதான் கொடுத்தாலும் அதைவிடப் பெறுமதியான பொக்கிஷம் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு ஜீவநதியின் பங்களிப்பு என்றும் பேசப்படும்.

திக்குவல்லை கமால்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More