செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும்

எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும்

1 minutes read

கைதடியைச் சேர்ந்தவரும் ,அவுஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் விஞ்ஞானியுமான எழுத்தாளர் ஆசி. கந்தராஜாவுக்கு பாராட்டு விழாவும் கௌரவிப்பும் கைதடியில் நடைபெற உள்ளது.

இலங்கையின் கலாசார அமைச்சால் வருடாந்தம் வழங்கப்படும் சாகித்திய விருதை இவரது பணச்சடங்கு எனும் சிறுகதைத் தொகுதி அண்மையில் பெற்றுக் கொண்டது.

இதனைப் பாராட்டி ஓய்வுபெற்ற அதிபர் ப.செல்லத்துரை தலைமையில் இந்த நிகழ்வு எதிர்வரும் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குக் கைதடி மேற்கு,இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கைதடி இலக்கிய ஆர்வலர்களும்,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர்.

நிகழ்வில் வரவேற்புரையை முன்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி.த.சுபத்திராதேவி நிகழ்த்த

ஆசியுரையை கைதடி இணுங்கித்தோட்டம் கந்தசுவாமி கோவிலின் பிரதம குரு சிவசிறி யோ.குருசாமிக் குருக்கள் நிகழ்த்துவார்.

அறிமுக உரையை ஓய்வுபெற்ற அதிபர் சி.பவளகுமாரன் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை பேராசிரியர். சி.சிவலிங்கராஜா, ஓய்வு பெற்ற அதிபர் திருமதி.ப.செல்வநாயகம்,

எழுத்தாளரும்,ஓய்வு பெற்ற மாவட்ட சமூக சேவைகள் அலுவலருமான வே.தபேந்திரன், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் அ.லோகநாதன், கவிஞரும் கல்விமானுமாகிய சோ.பத்மநாதன்,

ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன், எங்கட புத்தகங்கள் பதிப்பாசிரியர் கு.வசீகரன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

விழா நாயகன் கௌரவிப்பு ,ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து நன்றியுரையை கு.சுரேஸ்குமார் நிகழ்த்த உள்ளார்.

சாகித்திய விருது 2001ம் ஆண்டும் ஆசி கந்தராஜாவின் ‘பாவனைபேசலன்றி’ என்னும் சிறுகதைத்தொகுதிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.