செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவலை சிங்களத்தில் மொழிபெயர்க்க போட்டி போடும் சிங்கள எழுத்தாளர்கள்

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவலை சிங்களத்தில் மொழிபெயர்க்க போட்டி போடும் சிங்கள எழுத்தாளர்கள்

0 minutes read

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதாவும் விரைவில் சிங்கள மொழியாக்கம் வெளியாகவுள்ளது என்றும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

“பயங்கரவாதி நாவல் – கிளிநொச்சி வெளியீடு குறித்து அறிவித்த தருணத்தில் இந் நாவலை சிங்களத்தில் மொழிபெயர்க்க சில சிங்கள எழுத்தாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், நாவல் அச்சாகி சில மாதங்களிலேயே பயங்கரவாதி நாவலை மொழிபெயர்க்கும் பணியை சரத் ஆனந்த துவங்கிவிட்டார். அத்துடன் நடுகல் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்ட கடுல்ல பதிப்பகம் பயங்கரவாதி சிங்கள மொழியாக்கத்தை வெளியிடுகிறது. இன்னும் சில மாதங்களில் புத்தகம் வெளியாகிவிடும்.” என்று தீபச்செல்வன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஈழத் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் தமிழ் நாவல் நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்க சிங்கள எழுத்தாளர்கள் பெரும் ஆர்வத்தை வெளியிடுகின்றமை தமிழ் – சிங்கள இலக்கியத்தின் ஆரோக்கியமான சூழலைக் காண்பிக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.