எங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, தமிழர்களின் தலைவிதியையே மாற்றிப் போட்ட பல வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த தசாப்தமாகவே எண்பதுகள் கழிந்தது.
யாழ்ப்பாணத்தை இலங்கை ஆமியும் இயக்கங்களும் இந்திய இராணுவமும் மாறி மாறி கட்டுப்பாட்டில் வைத்திருந்த எண்பதுகளில், யாழ்ப்பாண மண்ணும் பரி. யோவான் வளாகமும் பெரும் ஆளுமைகளால் நிறைந்திருந்த அந்தக் உன்னதக் காலங்களில் நாங்கள் வாழ்ந்தோம்.
நாங்கள் வாழ்ந்த அந்த யுத்தக்காலங்களில் பரி யோவானில் இடம்பெற்ற சில சம்பவங்களின் தொகுப்பே பரி. யோவான் பொழுதுகள் இந்த நூல், புத்தகம். இந்தப் புத்தகம், ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. இது ஒரு சம்பவங்களின் தொகுப்பு, அந்தக் காலத்தின் நினைவு மீட்டல், ஒரு மொக்கு கொமர்ஸ்காரனின் கிறுக்கல்கள்.
வெண்பா புத்தகநிலையத்தில் நேரடியாகவும் online ஊடாகவும் வாங்கலாம்
Enter
Jude


https://venpaa.lk/book/pari-yovaan-poluthukal