செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சித்தார்த் 40 ‘ – அப்டேட்

சித்தார்த் 40 ‘ – அப்டேட்

0 minutes read

‘சித்தா’ படத்தின் மூலம் தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘எட்டுத் தோட்டாக்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘சித்தார்த் 40’ எனும் பெயரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ‘மாவீரன்’ திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இப்படத்தில் பங்குபற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் சித்தார்த் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More