செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வர்ணிக்க முடியா வசந்த கால நினைவுகள் | கேசுதன்

வர்ணிக்க முடியா வசந்த கால நினைவுகள் | கேசுதன்

0 minutes read

வலிக்காமல் வாழ்க்கையுமில்லை வளம் பெறா
வாழ்வுமில்லை இசைந்திடா பொருமில்லை
சகித்திடா எல்லையுமில்லை
கண்டறிந்த
காகிதமெல்லாம் கவிதையாய் பொலிவான் அவன்
ரசனையின் விசுவாசமாய் தெரிவான்

கேட்டிட கூட்டமும் உண்டு குழம்பிய நெஞ்சமும் உண்டு
வசைபாடும் நெஞ்சமும்
இசை கேட்கும்

தொடமுடியா தேகம் தனில் இசைக்காற்றும்
உரசிச்செல்லும்

மயில்த்தோகையாய் தாலாட்டிடும் நிகரறியா
அன்னை மடியாய்
மழலையும் மண்ணூடல் குதிக்கும்
அழகிக்கினிய ஓவியமாய் – அவன்

நெஞ்சமும் ரணமறியா இன்பத்துகள் வீசும்
பருவத்து பசுமையும்
தேன்சுரக்கும்

இளமையெனும் திருவிளக்கின் ஒளியாய்
அவன் காகிதமும் நவநீதம்
பொழியும்

கனவுகளை தட்டிச்செல்லும் இரவின் மடியில் இனிதான
வசந்தகால பொழுதுகளை வண்ணவடிவமாய்
உயிரூட்டும்

மென் காற்றும் சிறைபிடிக்க வசந்தகால சிணுங்கலுடன்
வலி தந்த வாழ்க்கையும்
வலியறியா ரணங்களும் சொல்வது உண்மை

வர்ணிக்க முடியா வசந்த கால
நினைவுகள்

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.