செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நிழல் பறவை | த. செல்வா

நிழல் பறவை | த. செல்வா

0 minutes read

பறத்தல் ஒரு மார்க்கம்
மன்மத அம்புகள் துளைப்பதும்
ஆல கால விடம் நுழைவதும்
பறத்தலின் அற்புதக் கீதம்

காற்றின் கடலில் சிறகு கலவி
கொள்கையில்
வெளியின் குழந்தை கண்திறக்கிறது

திறத்தல் பற்றி எதை எழுத
அறிவைத் திறக்க ஆழம் தேவை
அநுபவந் திறக்க வாழ்தல் தேவை
நிசம் திறக்க நிழல் தேவை

ஈற்றில்
நிழலெது
நிசமெது என பறந்தலைகையில்
வாழ்வு முடிந்து தொடங்குகிறது
விடிந்து இருளும் பொழுது போல்

பனித் துளிகளைக் கொண்டு
பவளப் பயிர் வளர்க்க முடியுமா
நிழல் தோற்றத்தை வைத்து
தாஜ்மகாலை அளந்திட முடியுமா

கடிதான நிலத்தில்
கடக்க முடியவில்லையெனில்
கால தேவன் மடியில் பறக்காக் குழந்தைகளே

கடத்தலை எண்ணி பறத்தலைச் சூடின்
நிழல் பறவைகளை வெல்லும்
ஒளிச்சிரிப்பு உன்னது

த.செல்வா
இரவு 7.23
நல்லூர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.