மார்கழி எம்பாவாய் | பாலசுகுமார்

மகளின் நினைவில்
மகிழ்ந்த காலை
மார்கழிப் பனியில்
குளிர்ந்த காலை

நிரை நிகழ் கவிதைகள்
புலரும் பொழுதில்
மகள் அவள் நிழலாய்
நினைவில் நீளும்

சூழும் பனி இருள் கிழித்து
திரளும் அவள் முகம் எங்கும்
வாழ்வின் இனிமையில் புரள
இதழ்விரி மலர்ப் பாவாய் நீ

பாலசுகுமார்

ஆசிரியர்