Friday, October 22, 2021

இதையும் படிங்க

பிறந்த நாள் முதல் ஒரு வயது வரை… குழந்தைக்குத் தவிர்க்க வேண்டியவை…

நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது. குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டியவை என்னவென்று விரிவாக...

வைட்டமின் ‘டி’ குறைபாட்டை வெளிப்படுத்தும் ‘நாக்கு’!

எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு வைட்டமின் டி அவசியமானது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது. எடை இழப்பிற்கும் வழிவகுக்கக்கூடியது. அதேவேளையில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் எலும்புகள்...

மனம் விட்டு அழுவதற்கு அறை

மனம் விட்டு பேச யாருமில்லை என்ற கவலையை போக்க அழுகை அறை (CRYING ROOM) என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும்.. அறிகுறிகளும்…

இன்று இளம் தாய்மார்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் மூலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்!

கொரோனா நோய் (கோவிட் 19) கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன...

குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

குழந்தைகளிடம் அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து...

ஆசிரியர்

நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும் பழங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. அவற்றுள் தற்போது பச்சை நிற ஆப்பிள் பரவலாக சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.

சிவப்பு நிற ஆப்பிளை போலவே பச்சை ஆப்பிளும் சம அளவில் ஊட்டச்சத்துக்களை கொண்டது. ஆனால் பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அத்துடன் இதில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை இரண்டுமே கலந்திருக்கும். பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போம்.

வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்: பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இதிலிருக்கும் அதிக நார்ச்சத்தானது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறையை தூண்டிவிடக்கூடியது. செரிமான அமைப்புக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது. அதனால் வளர்சிதை மாற்றமும் துரிதமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

கல்லீரலுக்கு நல்லது: பொதுவாக ஆன்டி ஆக்சிடென்டுகள், இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் முகவர்களாக செயல்படக்கூடியவை. கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. பச்சை ஆப்பிள், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குடல் இயக்கத்தையும் எளிதாக்கும். குடல் அமைப்பை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வரலாம். குறிப்பாக வேக வைத்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவது விரைவில் நிவாரணம் பெற உதவும். பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது.

எலும்புகளை வலுப்படுத்தும்: அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். குறிப்பாக கால்சியம் பற்றாக்குறை காரணமாக பெண்களுக்கு எலும்புகள் மெலிந்து பலவீனமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 வயதுக்கு பிறகு எலும்பு அடர்த்தி குறையும். மாதவிடாய் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது பலன் தரும். பச்சை ஆப்பிள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தடுக்கக்கூடியது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பச்சை ஆப்பிளுடன் பிற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நுரையீரலை பாதுகாக்கும்: பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிடுவது நுரையீரலுடன் தொடர்புடைய நோய் அபாயங்களை 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை ஆப்பிள், ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த வடிகாலாக அமையும். நோய்த்தொற்று பரவும் காலத்தில் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. அது நுரையீரலுக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.

பார்வை திறன் மேம்படும்: பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. அது கண்பார்வை திறனை அதிகரிக்க உதவும். சாலட்டுகளுடன் பச்சை ஆப்பிளை கலந்து சாப்பிடலாம். பச்சை ஆப்பிளின் தோலை தவிர்க்கக்கூடாது. அது இறைச்சியை போல் ஆரோக்கியமானது. நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் பச்சை ஆப்பிளுக்கு உண்டு.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்: பச்சை ஆப்பிள் இதய அமைப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 52 சதவீதம் குறைக்கக்கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின் படி, பச்சை ஆப்பிள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் உணவு பட்டியலில் பச்சை ஆப்பிளை சேர்க்க மறக்கக்கூடாது. குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை கொண்டவர்களுக்கு பச்சை ஆப்பிள் சிறந்த நண்பனாக விளங்கும்.

பச்சை ஆப்பிளை காலை மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு இடையே சாப்பிடலாம். இரவில் சாப்பிடுவது குடல் இயக்க செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடும். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது.

மலச்சிக்கல் நீக்கும் யோகா சிகிச்சை!

ஒரு மனிதனுக்கு காலை, மாலை இரு வேளை உடலில் மலம் சரியாக வெளியேற வேண்டும். நமது உடலில் கழிவுகள் நான்கு விதத்தில் வெளியேறுகின்றது. 1. கிட்னி...

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை...

நுரையீரலில் உள்ள அசுத்த காற்றை வெளியேற்றும் எளிய நாடி சுத்தி!

விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கையை சின் முத்திரையில் வைக்கவும். வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக...

உணவு உண்ணும் முறைகள்

இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக் கூடாது.

தலைக்கவசமும்..முடி உதிர்தலும்..!

இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

மேலும் பதிவுகள்

இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்படடன!

இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்றுள்ளன. 53 பெட்டிகளில் 1,818 கிலோ எடையுள்ள குறித்த தடுப்பூசி தொகுதி காலை கட்டுநாயக்க விமான...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்பு…. ‘மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும்...

உரப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

உரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு.!

நெல்லை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை 20ம் தேதி பதவியேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள்...

தலைக்கவசமும்..முடி உதிர்தலும்..!

இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல்...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு