Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

முடக்கத்தானின் மருத்துவ குணங்கள்

முடக்கத்­தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையா­கும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது.

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன்...

வறுத்தபூண்டு சாப்பிடுவதால் ஒரே நாளில் இவ்வளவு நன்மைகளா

பூண்டை வறுத்து சாப்பிட்டால் பல உடல் உபாதைகளும் நீங்கிவிடும். வறுத்தபூண்டு ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கும். ரத்தநாளங்களை சீராக்கும். 6 வறுத்த...

சளி நெஞ்சு சளி ஆஸ்துமா வீசிங் மூச்சு ஆகியவற்றிற்கான தீர்வுகள்

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால்...

இருமல், இரைப்பு தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் - 10. பூண்டு - 5 பல்,

ஆசிரியர்

ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனை – ஐபிஎஸ்!

இரிட்டபல் பவல் சின்ட்ரோம், ஐபிஎஸ் என்பது நம் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையாகும். இது வாலிப பருவத்தில் தொடங்கி எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருவருடைய உணவு பழக்கம், மன உளைச்சல் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும்.

ஐபிஎஸ் என்றால் என்ன
இது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டில் குறைபாட்டை ஏற்படுத்தி உடலில் பலவிதமான அறிகுறிகளை உண்டாக்கக் கூடிய ஒரு பிரச்சனை. ஐபிஎஸ் பிரச்சனைக்கான காரணங்கள் என்பது குறிப்பிட்டு சொல்ல முடியாததாக இருக்கிறது என்றாலும் ஒருவரின் வாழும் சூழல், அவரின் உடல்வாகு, மரபியல் அம்சங்கள் மற்றும் மனதின் தன்மை போன்றவை இந்தப் பிரச்சினையை உண்டாக்க கூடியது என்று கூறலாம். ஜீரண மண்டல செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவது, பதட்டம், மன சோர்வு, வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்கள், அதீத பயம் போன்றவை இந்த நோயை ஏற்படுத்தலாம். இரைப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளும் இந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம். மாதவிடாய் காலங்களிலும் மாதவிடாய் நிற்கும் காலங்களிலும், சினைமுட்டை வெடிக்கும் காலங்களிலும் இந்த பிரச்சனை சிலருக்கு தோன்றலாம். சில வகையான உணவுப் பொருட்களும் கூட இந்த பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஐபிஎஸ் இன் அறிகுறிகள்

வயிற்று வலி, உடல் எடை குறைதல், வயிற்றில் உப்புசம், மலம் கழிக்கும் பொழுது ரத்தக்கசிவு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படுதல், மலத்தை அடக்க முடியாமை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

ஐபிஎஸ் எப்படி கண்டு

பிடிக்கப்படுகிறது

இந்த நோய்க்கு என்று குறிப்பிட்ட பரிசோதனை முறைகள் எதுவும் இல்லை என்றாலும் அறிகுறிகளைப் பொறுத்து இது கண்டுபிடிக்கப்படுகிறது. ஒருவரின் உடல் பற்றிய முழு மருத்துவப் பரிசோதனைகளும், அவருடைய அறிகுறிகளை கேட்டறிதல், அவர் உடலை நேரடியாய் பரிசோதித்துப் பார்த்தும் இந்த பிரச்சனை கண்டுபிடிக்கப்படுகிறது. மேலும் கொலனோஸ்கோபி, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி, பாக்டீரியல் ஓவர் க்ரோத் பிரத் டெஸ்ட், ரத்தப் பரிசோதனைகள், மலப் பரிசோதனை போன்றவற்றின் மூலமும் இந்த நோய் கண்டறியப்படுகிறது.

ஐபிஎஸ் ற்கான சிகிச்சைகள்

ஐபிஎஸ் பிரச்சனையை மருந்துகள் மூலம் மட்டும் குணப்படுத்த முடியாது. இதை ஒருவரின் உணவு பழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம், மன உளைச்சல் மேலாண்மை போன்றவற்றின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

  • உணவில் அதிக நார் சத்துள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களான சோடா போன்றவற்றையும், மது, சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள், கோதுமை போன்ற பொருட்களில் உள்ள க்ளூட்டன் போன்றவற்றை தவிர்ப்பதாலும் கட்டுப்படுத்தலாம்.
  • தினமும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயிற்று வலிக்கான மருந்துகளை மற்றும் மனச் சோர்வு இருந்தால் அதற்கான மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பாக்டீரியா தொற்று இருந்தால் அதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் வேண்டும்.
  • மலச்சிக்கல் இருந்தாலும் அதற்கான மருந்துகளையும் உணவு முறை மாற்றங்களையும் செய்துகொள்ள வேண்டும்.
  • மனநல ஆலோசகர் மூலம் மனதில் இருக்கக்கூடிய பயம் கவலை பதட்டம் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை பற்றி அலசி அதற்கான தீர்வுகளையும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உடல் தளர்த்தல் பயிற்சிகளையும் மன தளர்த்தல் பயிற்சிகளையும் மனநல ஆலோசகர்களிடம் கற்றுக்கொள்ளலாம்.
  • மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி இந்த பிரச்சனைக்கு அதிக அனுகூலமான வை.

ஐபிஎஸ் பொருத்தவரை அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கை முறையை சரியான வழியில் அமைத்துக் கொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து முழுவதுமாக மீண்டு ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

இதையும் படிங்க

இடுப்புப் பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க இவற்றை செய்யுங்கள்

பொதுவாக சில பெண்களுக்கு இடுப்பை சுற்றி கொழுப்புக்கள் படிந்து இடுப்பு பகுதி அகண்டு காணப்படும். இதற்கு ஜிம் சென்று தான் குறைக்க வேண்டும்...

முருங்கை இலையில் இவ்வளவு அற்புத நன்மைகளா

முருங்கை இலை.. முருங்கை இலைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களில் பலருக்கு தெரியும். ஆனால்...

ஆண் | பெண் இரண்டு பேரில் யாருக்கு புற்றுநோய் வரும் ஆபத்து

புற்றுநோய் என்பது உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஆபத்தான நிலை.

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

சிறுநீர்.. பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர்...

உணவில் தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்

நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்த்து கொள்வது சுவையை மட்டும் தராது கூடவே உடலுக்கு ஏராளமான சத்துக்களையும் தருகிறது என்பது தெரியுமா? புளிரசம்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

நாசர் புகழ்ந்தஇலங்கை தமிழ்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார்.

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு