Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடல் எடையை குறைப்பதில் சிறந்தது எது? நடைப்பயிற்சியா? மெல்லோட்டமா? ஓட்டப்பயிற்சியா?

உடல் எடையை குறைப்பதில் சிறந்தது எது? நடைப்பயிற்சியா? மெல்லோட்டமா? ஓட்டப்பயிற்சியா?

2 minutes read

எம்மில் பலரும் தங்களுடைய ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டி வருகிறார்கள்.  குறிப்பாக உடல் எடை மீதும், தோற்றப் பொலிவின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

இவர்களில் பலருக்கும் உடல் எடையை வேகமாக குறைக்கும் விடயத்தில் நடைப்பயிற்சி தான் சிறந்தது என்று ஒரு பிரிவினரும், ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டம் தான் சிறந்தது என மற்றொரு பிரிவினரும், இந்த இரண்டும் இல்லை. 

ஓடுவதில்தான் உடல் எடை குறையும் என்று மூன்றாவது பிரிவினரும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கூடுதல் விவரங்களை ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தெரிவிக்கையில், ” உடல் எடை குறைப்பதில் மூன்று வகையினதான பயிற்சியும் சிறந்ததுதான். 

இருப்பினும் நடைப்பயிற்சியின் போது கைகள் மற்றும் கால்கள் மட்டுமே இயங்குகின்றன,அத்துடன் நடைப்பயிற்சியின் போது எம்மில் பலரும் அவருடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடப்பர். 

36 Tips When You're Walking to Lose Weight — Eat This Not That

இதன்போது எம்முடைய உடலில் இருந்து கரைக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை, மெல்லோட்டம் மற்றும் ஓட்டப் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரிகளை விட குறைவு என்பதுதான் உண்மை.

மேலும் நடைபயிற்சியை விட மெல்லோட்டத்தின்போது எம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தில் விரைவு தன்மை உண்டாகிறது. 

இதனை ஆங்கிலத்தில் speed dependent metabolic rate என்று குறிப்பிடுவார்கள். 

எம்மில் யாரேனும் வேகமாக ஓடுவதை தங்களுடைய நாளாந்த உடற்பயிற்சியாக கொண்டிருந்தால், அவர்களின் உடல் எடை விரைவாக உயராது. ஏனெனில் அவர்களுடைய ஸ்பீட் டிபடென்ட் மெட்டபாலிக் ரேட் , உடல் எடை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. 

இந்த வகையினதான வளர்சிதைமாற்றம் மெல்லோட்டத்தின் போதும் செயல்படுவதால், நடைபயிற்சியை விட மெல்லோட்ட பயிற்சியை மேற்கொண்டால் உடல் எடை விரைவாக குறையும். 

அதே தருணத்தில் அனைத்து வயதினரும் மெல்லோட்ட பயிற்சியை மேற்கொள்ள இயலும். கடினமாக இருக்கும் என உணர்ந்தால், உங்களுடைய மருத்துவரின் வழிகாட்டலுடன் பயிற்சியை தொடங்கி, தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

அத்துடன் நடைப்பயிற்சியின் போது எம்முடைய கை கால்கள் மட்டும் associated movements என்ற வகையில் இயங்குகிறது. 

ஆனால் மெல்லோட்டம் மற்றும் ஓட்டப் பயிற்சியின் போது whole body workout என்ற வகையில் இயங்குவதால் உடலில் சேர்ந்திருக்கும் கூடுதல் கலோரிகள் விரைவாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறையத் தொடங்குகிறது. 

மேலும் நடைபயிற்சியை விட மெல்லோட்டம் மற்றும் ஓட்ட பயிற்சியின் போது உங்களின் எலும்பு மற்றும் தசைகள் வலிமையடைகின்றன. அத்துடன் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமும் பாரிய அளவில் குறைகிறது.” என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More