செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்

செல்போன்களால்..

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆ ளை கொ ல்லும் அ ரக்கனாக மாறிவிட்டது.

ஏனென்றால் சமீபத்தில் நடத்தில் ஆய்வொன்றில் கைத்தொலைபேசி மோ கத்தால் பல்வேறு புதிய பா திப்புகள் பரவிக் கொண்டிருப்பதாக நி புணர்கள் எ ச்சரிக்கை செய்துள்ளனர்.

அதில் செல்பி மோ கத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் பிரியர்களுக்கு ‘கேம் டிஸ்ஸார்டர்’, செல்போனை பிரிய நேர்ந்தால் ‘நோமோபோபியா’ மன க லக்கம் என பல்வேறு புதிய பா திப்புகள் முக்கிய இடம் பெறுகின்றனர். அந்தவகையில் தற்போது செல்போன் மோ கத்தால் ஏற்படும் நோ ய்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

மொபைல் எல்போ : ஸ்மார்ட்போன்களின் இயக்கங்களுக்கு பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை அதிகமாக பயன்படுகின்றது. இதனால் பெருவிரலில் மற்றும் முன்கை, மணிக்கட்டுகளில் அதிக வ லி ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஆர்தோபெடிக் அகாடமி இதை மொபைல் எல்போ பி ரச்சினை என்று வரையறுக்கிறது. இது அடுத்தகட்டமாக ‘கார்பெல் டன்னல் சிண்ட்ரோம்’ எனப்படும் ந ரம்பு பா திப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது. இதுபோன்ற பி ரச்சினையை தவிர்க்க தட்டச்சு செய்வதை குறைத்துக்கொண்டு குரல் ‘மெஸேஜ்’ அனுப்புவதன் மூலம் விரல்களுக்கான வேலையை குறைக்கலாம் அறிவுறுத்தி உள்ளனர்.

கேமிங் டிஸ்ஸார்டர் : உலக சுகாதார அமைப்பு செல்போன் விளையாட்டுகள் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளில் மூ ழ்கி உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ‘கேமிங் டிஸ்ஸார்டர்’ எனும் தீ விர விளையாட்டு ஆ ர்வத்துக்கு உள்ளானவர்கள் என்கிறது . இதனால் தூ க்க கு றைவு, அலுவலக வேலை மற்றும் பொ றுப்புகளில் பி டிப்பின்மை, அன்றாட வாழ்க்கையில் ச லிப்பு கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள்.

பிளேஸ்டேசன் மற்றும் கன்சோல், வீ.ஆர். போன்ற விளையாட்டு கருவிகளுடன் வீடியோ கேம் விளையாடுபவர்கள் எளிதில் பா திக்கப்படு கிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் விரைவில் சோ ர்வடைந்துவிடுகிறார்கள். கண்கள், மூட்டுகளில் பா திப்பு ஏற்படுகிறது.

செல்பிடிஸ் : நாட்டிங்கம் டிரென்ட் யுனிவர்சிட்டி ஆய்வாளர்கள், சிலரால் செல்பி எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றும், சிலர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 6 செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள் என்றும் மதிப்பிட்டு உள்ளனர்.

பலருக்கு தினசரி ஒரு செல்பி படமாவது சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்னும் மனநிலைக்கு மாறி உள்ளனர். இல்லாவிட்டால் அவர்கள் க வலையில் தள்ளப்படுகிறார்கள் இத்தகைய தீவிர செல்பி மனப்போக்கை நிபுணர்கள், ‘செல்பிடிஸ்’ பா திப்பு என்று வரையறுக்கிறார்கள்.

டெக்ஸ்ட் நெக் : அளவுக்கு அதிகமாக தலையை சாய்த்து வைப்பது கழுத்து தசை பா திப்புக்கு காரணமாகிறது. அப்போது கழுத்தில் 60 பவுண்ட் அழு த்தம் ஏற்படுவதாக மதிப்பிடுகின்றனர். இது கழுத்து தசைகளில் பிடிப்பு, வ லி ஏற்பட காரணமாகிறது. இந்த பா திப்பு ‘டெக்ஸ்ட் நெக்’ என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து விடுபட கண்களுக்கு நேரான அல்லது சற்று கீழிறங்கிய நிலையில் திரைகளை வைத்து பணி செய்வதும், பார்வையிடுவதும் கழுத்து பா திப்புகள், கண் பா திப்புகளை குறைக்கும் என்று அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நோமோபோபியா : பயணங்களாலோ அல்லது வேலைச் சூழலாலோ ஒருவருக்கு சிறிது நேரம் செல்போனை பயன் படுத்த முடியாத சூழலை உருவாக்கினால் அவர் மனக்கலக்கத்திற்கு உள்ளாகுவதுண்டு.

இந்த பா திப்பை ‘நோமோபோபியா’ என்று வரையறுக்கிறார்கள். இந்த வார்த்தை புதிதாக கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தீவிர மனப்போ க்கு மன அ ழுத்தத்தையும், பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். 53 சதவீத செல்போன் பயன்பாட்டாளர்கள், சிறிது நேர செல்போன் பயன்பாட்டு குறைவு சூழலுக்கும், அதிக க லக்கம் அடைவதாக தெரியவந்துள்ளது.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் : கணினிகள், செல்போன் திரைகளை மணிக்கணக்கில் பார்வையிடும் போது கண்களில் ஏற்படும் பாதிப்பை இப்படி அழைக்கின்றனர். குறிப்பாக அதிகமாக எலக்ட்ரானிக் திரைகளை பார்ப்பதனால் கண்கள் உலர்வடைதல், கண்வலி மற்றும் பார்வைச் சிதைவு ஏற்படுகின்றன.

மேலும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள அவர்கள் 20-20-20-20 என்ற மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்த்து, 20 முறை, குறைந்தபட்சம் 20 விநாடிகள் கண்சிமிட்ட வேண்டும் என்பது தான்.

நன்றி | வவுனியா நெற்

ஆசிரியர்