ஒரஞ் பழத்தின்சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை மாலை என இரு வேளையும் பருகி வந்தால் உடல் தேறும் தேகம் சுறு சுறுப்படையும் புத்துணர்வு பெறும். புது இரத்தகம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டு வரும் இந்த ஒரேஞ் பலாச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும் நரம்பு பலம் பெறும்.
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைவதுடன் உடலின் நோய்எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சரும பாதுகாப்புக்கும் சிறுநீரகத் தொற்றுக்கும் நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
பப்பாளி ஜூஸ் தினமும் ஒரு கப் பப்பாளி ஜூஸ் அருந்தினால் அஜீரண கோளாறு சரியாவதுடன் விற்றமின் எ இருப்பதனால் இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் வயிற்றுப்புழுக்களை அழிக்கும் கண்பார்வை பளிச்சிடுவதோடு மலசிக்கல் ஏற்படாது.
மாம்பழ ஜூஸ் இதை எடுப்பதனால் அதில் காணப்படும் அதிக விற்றமின் c உடல் நிறையை சீராக வைத்துக் கொள்ளும் இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மார்பக புற்றுநோய் மற்றும் இதர புற்று நோய் கிருமிகள் உருவாவதை ஆரம்பத்துல தடுக்கிறது.
சாத்துக்குடி ஜூஸ் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது இது உடலுக்கு புத்துணர்வு வழங்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
உடலில் புதிய ரத்தம் விருத்தியாக . ரத்த சோகை உள்ளவர்கள் தினம் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும்.
அப்பிள் ஜூஸ் விற்றமின் எ,சி நிறைந்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் இதயத்துக்கு நல்லது.வளர்ச்சி சிதை மாற்றத்தை சீராக்கும் ஜீரனசக்தியை மேம்படுத்தும் கான்சர் போன்ற நோய் வராமல் தடுக்கும் நுரையீரல் புற்றுநோய் போன்ற சிலவகை புற்றுநோய்களை தடுக்கும்.