December 6, 2023 12:04 pm

நரம்பு மண்டலத்தை பேணும் தோப்புக்கரணம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
தோப்புக்கரணம்

தோப்புக்காரணம் மனிதரின் நரம்பு மண்டலத்துக்கு பாரிய பயனை அளிக்கின்றது.

தோப்புக்கரணம் அதிகாலையில் செய்து வந்தால் மிகவும் நல்லது என்கின்றனர். அதிகாலை எழுந்து பல்துலக்கி ,குளித்து இந்த தோப்புக்கரணம் போடுதல் வேண்டும். அப்போது இதன் பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

இது ஒரு யோகாசனம் ஆகும் .  48 ஆண்டுகளுக்கு முதல் இருந்தே பாடசாலைகளில் தண்டனையாக இருந்து  வருவதாக ஒரு செய்தி உள்ளது.

சுத்தமான சமதளமான இடத்தில் இருந்து செய்யப்படுதல் வேண்டும். உடைகள் தளர்வாக இருத்தல் வேண்டும் . வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் நன்றாக பிடித்து கொண்டு கால்களை உடலின் அகலத்தில் வைத்து . இருந்து எழுதல் வேண்டும் .

முதல் முறை செய்யும் போது 5 முறை எனவும் பின் 7 ,9 ,21 என தொடரலாம் . இருக்கும் போது மூச்சை உள்  இழுத்து கொள்ள வேண்டும். எழும் போது மூச்சை வெளிவிடவும் வேண்டும். இவ்வாறு உள்ளிழுக்கப்படும் மூச்சு பிராண வாயுவாக மூளையை சென்றடையும்.

சிறுவர்கள் பெரியவர்கள் என்று அனைவரது நரம்பு மண்டலங்களை விருத்தி செய்யும்.

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்