வினோத பிரச்னையால் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து பெண்வினோத பிரச்னையால் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் நூதன பிரச்னையில் சிக்கி அவதிப்படுகிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது பெண் சார்லோட் ஸ்டார்லிங்.

இந்த பெண் தான் Dermatillomania என்ற நூதன பிரச்னையில் சிக்கி தவிக்கிறார்.

 

அதாவது, உடம்பில் இருக்கும் முடியையெல்லாம் விரல்களாலேயே பிடுங்கி எறிவதுதான்.

 

தலை முடியைத் தவிர உடம்பில் வேறு எந்த இடத்திலும் முடியை வளர விடவே மாட்டாராம்.

 

முடியைப் பார்த்து விட்டால் போதும் உடனே பிடுங்கி விடுகிறார், சில நேரங்களில் கட்டிங் பிளேயரை வைத்தும் கூட பிடுங்கி விடுவாராம். குறிப்பாக நகங்களை கூர்மையாக வைத்துள்ளாராம்.

 

அவரால் இதை அடக்க முடியவில்லையாம், கட்டுப்படுத்த முடியவில்லையாம். இதனால் உடம்பெல்லாம் ரத்தக் காயத்துடன் காட்சி தருகிறார்.

 

இந்த கெட்ட பழக்கத்தால் தற்போது இவருக்கு உயிர் பயமும் வந்து விட்டதாம்.

 

தான் எங்கே வெறி பிடித்தவளாக மாறி விடுவோமோ என்று அஞ்சுகிறாராம். இதனால் இவரது காதலர் எப்போதும் கூடவே இருக்கிறாராம்.

 

இதுகுறித்து சார்லோட் கூறுகையில், இது போதைப் பழக்கம் போல இதற்கு நான் அடிமையாகி விட்டேன்.

 

மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடியைப் பிடுங்க என்னவெல்லாமோ செய்கிறேன். உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்