March 24, 2023 4:44 pm

பார்வையற்றவர்களின் காதல் திருமணத்தில் கலந்த நாய்களுக்கும் திருமணம்பார்வையற்றவர்களின் காதல் திருமணத்தில் கலந்த நாய்களுக்கும் திருமணம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக்கூ திரைப்படத்தில் இரண்டு பார்வையில்லாதவர்கள் காதலிப்பது போன்ற காட்சிகள் வரும். இதுபோலவே இங்கிலாந்து நாட்டில் இரண்டு பார்வையற்றவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர்களுக்கு உதவியாக வந்த இரண்டு நாய்களும் ஒன்றையொன்று காதலித்து திருமணம் செய்துகொண்டன என்பதுதான்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Claire Johnson என்ற 50 வயது நபர் இளவயதில் சர்க்கரை வியாதி காரணமாக பார்வையிழந்தார். அதன்பின்னர் அவர் திருமணம் செய்யாமல் தனிமையிலேயே வாழ்ந்து வந்தார். இவரை போல்வே 51 வயது Mark Gaffey என்ற பெண்ணும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர். இருவருக்கும் இடையே பார்வையில்லாதவர்களுக்கு உதவும் நாய்களை தேர்ந்தெடுக்க நாய்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்தபோது பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்கு உதவி செய்ய ஆளுக்கொரு நாயை தேர்ந்தெடுத்தனர்.

நாளடைவில் இருவர் அடிக்கடி தங்கள் நாய்களுடன் வெளியே சுற்றி வரத்தொடங்கினர். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் இருவரின் நாய்களும் ஒன்றையொன்று காதல் செய்கிறது என்பது. நேற்று இருவரின் திருமணம் இங்கிலாந்து நாட்டில் உள்ள Stoke-on-Trent என்ற இடத்தில் நடந்தபோது, அவர்கள் தங்கள் நாய்களுக்கும் திருமணம் செய்தனர்.

Claire-Johnson-and-Mark-Gaffey-3274480

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்