2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் வருமானம்2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் வருமானம்

Mark-Zuckerberg

2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை உபயோகிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்த டேவிட் எபர்ஸ்மன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்