மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்

kamalnath-01

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல்காந்தியை குற்றம் சாட்ட முடியாது என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 279 இடங்கள் கிடைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தோல்வியுற்றால் அதற்கு ராகுல் எந்த விதத்திலும் காரணமாக மாட்டார். அவர் மீது காங்கிரஸார் குற்றம் சாட்ட முடியாது என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

ஆசிரியர்