பிரிட்டன் தலைநகர் லண்டன் முதலிடம்- உலகின் செல்வாக்குமிக்க நகரங்களில்பிரிட்டன் தலைநகர் லண்டன் முதலிடம்- உலகின் செல்வாக்குமிக்க நகரங்களில்

உலகின் செல்வாக்குமிக்க நகரங்களில் லண்டன் முதலிடத்தில் உள்ளது.

உலகில் அதிக செல்வாக்குமிக்க நகரங்கள் குறித்து `போர்ப்ஸ்’ இதழ் அண்மையில் ஆய்வு நடத்தியது. மொத்தம் 58 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பிரிட்டன் தலைநகர் லண்டன் முதலிடத்தை யும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. பாரீஸ், சிங்கப்பூர் அடுத் தடுத்த இடங்களைப் பிடித்தன.

இந்த வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சீனத் தலைநகர் பெய்ஜிங், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

உலகளாவிய அளவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் நகரங்கள் வரிசையில் லண்டன் தனது பெருமையை இன்னும் இழக்க வில்லை என்று ஆய்வை நடத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்