தென்னாப்பிரிக்கா விசா தலாய் லாமாவுக்கு மறுப்பு தென்னாப்பிரிக்கா விசா தலாய் லாமாவுக்கு மறுப்பு

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நான்கு தலைவர்களின் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு உச்சி மாநாட்டினை நடத்த உள்ளன. டுட்டு, நெல்சன் மண்டேலா, எப்டபிள்யு டி கிளர்க் மற்றும் ஆல்பர்ட் லூதுலி ஆகியோர் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்கு தலாய் லாமாவுக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது என்று அவரது பிரதிநிதி நங்சா சோடன் இன்று தெரிவித்துள்ளார். சீனாவிற்கும், தென்னாப்பிரிக்காவிற்குமான நல்லுறவு இந்த விசா அனுமதியால் பாதிக்கப்படக்கூடும் என்று தொலைபேசி மூலம் தனக்குத் தகவல் தரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த 14ஆவது வருடாந்திர சமாதான மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ள பல முக்கியப் பிரமுகர்களும் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கக்கூடும் என்று தென்னாப்பிரிக்க பரிசாளர்களில் ஒருவரான ஆர்ச்பிஷப் டெஸ்மான்ட் டுட்டுவின் தகவல் தொடர்பாளர் ரோஜர் பிரைட்மேன் தெரிவித்தார்.

ஆசிரியர்