பிரான்ஸில் 5 பெண்கள் கைது ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்சேர்ப்பு விவகாரத்தில்பிரான்ஸில் 5 பெண்கள் கைது ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்சேர்ப்பு விவகாரத்தில்

சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளம் பெண்களை சேர்க்கும் கும்பலைச் சேர்ந்த ஐந்து பெண்களை பிரான்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் பெர்னார்டு காùஸனியூவே கூறுகையில், “”செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்தப் பெண்கள் பிரான்ஸின் மத்தியப் பகுதியிலுள்ள லியோன் என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

சிரியாவில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 2,000 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து சண்டையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அங்கு பயிற்சி பெற்றுள்ள அவர்கள், தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் கடந்த மே மாதம் யூத அருங்காட்சியகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தி 4 பேரைக் கொன்றவர் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்றவர் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆசிரியர்