தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக சிலர் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில், ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்