ஹஜ் யாத்திரை: 77 இந்தியர்கள் மரணம்ஹஜ் யாத்திரை: 77 இந்தியர்கள் மரணம்

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 77 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் முதுமையின் பாதிப்புகள் காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 1,36,020 இந்தியர்களில் 1,00,020 பேர் ஹஜ் கமிட்டி மூலம் வந்தனர்.

இவர்களில் 77 பேர், புனிதப்பயணத்தின்போது உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் இயற்கையான மரணம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவர் மட்டும் மின்தூக்கியில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தார்.

இதுதவிர, இந்தியாவிலிருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், உடல் நலக் குறைவு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆசிரியர்